Friday, February 29, 2008

தலைகீழ் லென்ஸ்...

எனக்கு சின்ன சின்ன பொருட்கள் மற்றும் பூச்சிகளை படம் பிடிப்பதற்கு ரொம்ப பிடிக்கும்... சிறு பொருட்களை நன்றாக எடுப்பதற்கு மேக்ரோ லென்ஸ் தேவை... அது தற்சமயம் என்னிடம் இல்லை...

இணையத்தில் தேடி பார்த்ததில் லென்சை திருப்பி வைத்தால் சிறு பொருட்கள் பெரிதாக தெரியும் என்று அறிந்து கொண்டேன்... இது SLR/DSLR காமிராவில் தான் சாத்தியம்...

லென்சை திருப்பி வைத்து நான் எடுத்த சில புகை படங்கள் கீழே...

பகல் கொள்ளைகாரர்கள்... :)



எடுத்துட்டு போறது சரி... எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க... ;)

முத்துக்கள் அல்ல பால் துளிகள் :)

ஒரு செண்டின் முன்னும் பின்னும்...

லிங்கன்...



இந்த படமும் லென்சை திருப்பி போட்டு எடுத்தது தான் :)

லென்சை திருப்பி உபயோக படுத்தும் முறையை இன்னொரு பதிவா பின்னர் போடறேன்...
இந்த படங்களில் உள்ள குறை/நிறைகளை சொல்லிட்டு போங்க... ;)

Wednesday, February 6, 2008

வட்டத்தை கட்டம் கட்டும் போட்டி - PIT பிப்ரவரி 2008

முதல் இரண்டும் போட்டிக்கு...

1.) தண்ணீர் துளிகள்...

பூக்கள் மீது மட்டும் தான் தண்ணீர் தெளித்து படம் பிடிக்கணுமா ? நாங்க குறுந்தகடு மேலயும் தண்ணீர் தெளித்து படம் பிடிப்போம்ல :)


2.) காற்று குமிழ்கள்...


சோடவ கிளாஸ்ல ஊத்துனா நிறைய காற்று குமிழ்கள் உருவாச்சு... உடனே பொட்டிய தூக்கிடோம்ள :)


மற்றும் சில உங்கள் பார்வைக்கு...









எனக்கு தொடக்கமும், முடிவும் இல்லைன்னு பஞ்ச் டைலாக் பேசிகிட்டு இருந்த வட்டத்தை எல்லாம் கட்டம் கட்டி போட்டிக்கு புடிச்சாச்சு... :) குறை நிறை(?!) இருந்தா சொல்லுங்கப்பு... திருத்திக்குறேன்....