Saturday, March 22, 2008

பைங்குடில் மலர்கள்...

இங்க வசந்தகாலம் தொடங்கியாச்சு... ஆனா நேத்து கூட பனி பொலிவு நடந்தது :(. எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள்ள இருக்கறதுன்னு, அருகில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சென்றேன்.

வெளியே எல்லாம் வெள்ளையாக தான் இருந்தது. ஆனா அங்கு உள்ள பைங்குடில்(greenhouse) அறையில் மலர் செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தன...
அந்த பூக்களை நான் க்ளிக்கியவை கீழே... :)




















பூக்கள் மட்டுமல்ல இலைகள் கூட அழகு தான்... :)







பைங்குடில் அறைக்கு வெளியே எப்படி இருக்கு என்று பாருங்க :(







பார்க்க அழகா இருந்தாலும் குளிர் பட்டய கெளப்பும் :(
இன்னும் சில நாட்க்கள் தான் அப்புறம் வசந்த காலம் தான் :)

Tuesday, March 4, 2008

பிரதிப்பலிப்பு - மார்ச் மாத புகைப்பட போட்டிக்கு

வணக்கம்...

இதுவரைக்கும் போட்டிக்கு வந்த படங்கள் எல்லாம் பட்டய கெளப்புது... இங்க வெளியே வானிலை சரி இல்லாததால், அறைக்குள்ளே இருந்து பிடித்த பிரதிபலிப்புகள்... :)

முதல் மற்றும் மூன்றாம் படம் போட்டிக்கு...

எல்லா படங்களையும் பெரிதாக்கி பாருங்கள்... :) நன்றி...

1.) தேநீர் இடைவேளை...


குழந்தைகள் விளையாடும் சொப்பு பொம்மையை கொண்டு எடுத்தப்படம் :)

2.) காப்பு வச்சுட்டான்யா ஆப்பு !!!

"காப்" கிட்ட மாட்டிகிட்ட மற்றும் மாட்ட போறவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் :)

3.) போர்க்களம்...

கருப்பு ராஜவ சாச்சுபுட்டாங்கயா :(

4.) குளிர் கண்ணாடி...

என் அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் பிம்பம்...

5.) "பீன்" ("க்ளொவுட் கேட்")


எனக்கு பிரதிபலிப்பு என்ற உடன் முதலில் நினைவுக்கு வருவது சிக்காகோவில் உள்ள "பீன்" தான். முன்னர் எடுத்த பழைய படம் :)


நல்லதோ கெட்டதோ எதுவா இருந்தாலும் உங்க விமர்சனத்தை சொல்லிட்டு போங்கப்பு ;)