Sunday, May 16, 2010

கயோட்டி (coyote)
Saturday, April 24, 2010

கேள்வி - பதில்

வணக்கம் மக்கா,
மொத மொதலா ஒரு கேள்வி பதில் எழுதுறேன். இதுவரைக்கும் யாரும் என்னய இந்த மாதிரி ஆட்டதுக்கு கூப்பிட்டது இல்லை.
லதானந்த் சார் என்னையும் மதிச்சு கேள்வி கேட்டு இருக்கார். நெம்ப மகிழ்ச்சி !


கேள்வி எல்லாம் கொஞ்சம் எடக்கு மடக்கா தான் இருக்கு,

1). அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
சில முறை திண்டாடியது உண்டு. ஆனா பின் வரும் நிகழ்ச்சிய என்னால மறக்க முடியாது. எங்க பாட்டி ஊர் பக்கம் டாய்லட் எல்லாம் கிடையாது திறந்தவெளி தான்.
ஒரு விடுமுறைல பக்கத்துக்கு ஊர் போயிருக்கும் போது, எனக்கு அவசரம் அதிகமாக அந்த ஏரியா கொள்ளக்காடு எங்கன்னு கஷ்டப்பட்டு தேடி போயாச்சு. ஆனா அவசரத்துல "செந்தட்டி" செடி மேல பட்டுடுச்சு. நாள் பூரா ஒரே எரிச்சல். ரெண்டு நாள் அண்ட்ராயர் கூட போட முடியலை. :D

2). யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
பொதுவா நான் யாரை பார்த்தும் பொறாமைப் படறதில்லை. ஆனா கொஞ்ச நாளா ரோட்ல ஜோடியா சுத்துரவங்களை பார்த்தா கொஞ்சம் காதுல புகை வருது. சீக்கரம் கல்யாணம் பண்ணி வைங்கன்னு வீட்ல சொல்லி பார்த்தாச்சு. எங்க கேட்டாதானே :(

3). எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?
போன பதிலிலேயே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் நான் எம்புட்டு காஞ்சு போய் கேடக்குறேன்னு. இதுல கிளுகிளுப்பு வேறயா ?

4). நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
நண்பர்களோடு படம் பார்க்க சென்றபோது, நாங்கள் விரும்பிய படத்தின் டிக்கெட் கிடைக்கலை. அதே காம்ப்ளக்ஸ்ல இன்னொரு ஆங்கில படம் ஓடி கிட்டு இருந்துச்சு. அந்த படத்தோட டைட்டில் நல்லா இருந்துச்சு, போஸ்டர்ல இருந்த நடிகையும் சூப்பரா இருந்ததால நண்பர்களை நச்சரிச்சு அந்த படத்துக்கு இழுத்துட்டு போய்டேன். படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் கழிச்சு தான் தெரிஞ்சுச்சு அது ஆங்கில படம் அல்ல எதோ ஸ்பானிஷ் மொழி படம். ஒண்ணுமே புரியலை. சரி குடுத்த காசுக்கு ஹீரோயினியை சைட்டடிப்போம்னு பார்த்தா. அந்த பொண்ணு ரெண்டு காட்சியில் மட்டும் வந்துட்டு மூணாவது காட்சியில செத்து போச்சி. நண்பர்கள் எல்லோரும் என்னய கொல வெறியோட பாக்குறாங்க. அவங்க அசந்த சமயமா பார்த்து தியேட்டர விட்டு ஓடி வந்துட்டேன். ஒரு ரெண்டு நாளு அவங்க கண்ணுலேயே படல.

5). இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?
குற்ற உணர்வு வர்ற அளவுக்கு இன்னும் பெருசா தப்பு பண்ணலை. நம்ப தப்பு எல்லாம் ரெம்ப சின்ன லெவல். இனிமேல் பெருசா ட்ரை பண்றேன்.

6). சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
நாலஞ்சு முறை வாங்கி போய் இருக்கேன்.

7). நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
எல்லாம் வண்டி ஒட்டும் போது பண்றது தான். குறிப்பா Over-Speeding.


8). அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
நான் கமென்ட் போடறதே மிக குறைவு. நம்ப கருத்த நாம தான் சொல்றோம்னு மறைக்கரதுக்கு அத சொல்லாமலே இருக்கலாம்.

9). அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
Old is Gold ;)

10). எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?
கண்டிப்பா குடுங்க. நம்ப கட ரெம்ப காத்தாடி கிட்டு இருக்கு. நீங்க லிங்க் கொடுத்தாவது யாரவது வராங்களானு பாப்போம். :)

என்னய இந்த விளையாட்டுக்கு சேர்த்துக்கிட்ட லதானந்த் அவர்களுக்கு மிக்க நன்றி !!!

Monday, September 28, 2009

நாரை

1). மீனுக்காக காத்து இருக்கோம். அது வரைக்கும் சின்ன ஸ்நாக்ஸ் ;)


2). தலைய நீட்டி மீனு தேடுறோம், ஒன்னும் சிக்க மாட்டேங்குது :(


3). ஆஹா மாட்டிக்கிச்சு :)


4).இன்னொருத்தனும் சிக்குவான் போல :D

Monday, July 6, 2009

குருவி


பதிவு போட்டு ரெம்ப நாள் ஆச்சு :(
பழைய படத்தை போட்டு ஒப்பேத்தி கிட்டு இருக்கேன் :D

Tuesday, June 9, 2009

கொக்கு சைவ கொக்கு


Monday, May 18, 2009

பச்சை நிறமே ! பச்சை நிறமே !!!


Sunday, April 26, 2009

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு :)

Tuesday, April 14, 2009

மலரும் மொட்டும்

Sunday, March 1, 2009

சிகப்பு நீலம்

இந்த பூச்சியோட தமிழ் பெயர் தெரியாது :(

தெரிஞ்சா சொல்லுங்கப்பு :D

ஆங்கில பெயர் - LadybugFriday, February 13, 2009

Northen Cardinal

Sunday, February 1, 2009

கம்பீரம்

Wednesday, January 21, 2009

பறவைகள்

பதிவு போட்டு பல நாள் ஆச்சு :(
இந்த புது வருடத்தை பறவைகள் படங்கள் வச்சு ஆரம்பிக்குறேன். :D

வழுக்கை கழுகு (Bald Eagle)


Waxwing


குருவிமரம் கொத்தி(Downy Woodpecker)
இனிமேல் தொடர்ந்து பதிவு போடணும் :)

Thursday, November 27, 2008

ஆம்பல் - 2

Saturday, November 8, 2008

உணவு இடைவேளை

Sunday, November 2, 2008

திருவிழா

Thursday, October 23, 2008

இலையுதிர் சாலைFriday, October 10, 2008

மதுவினை தேடி !!!
Sunday, September 28, 2008

இதழ்கள்