Saturday, March 22, 2008

பைங்குடில் மலர்கள்...

இங்க வசந்தகாலம் தொடங்கியாச்சு... ஆனா நேத்து கூட பனி பொலிவு நடந்தது :(. எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள்ள இருக்கறதுன்னு, அருகில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சென்றேன்.

வெளியே எல்லாம் வெள்ளையாக தான் இருந்தது. ஆனா அங்கு உள்ள பைங்குடில்(greenhouse) அறையில் மலர் செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தன...
அந்த பூக்களை நான் க்ளிக்கியவை கீழே... :)




















பூக்கள் மட்டுமல்ல இலைகள் கூட அழகு தான்... :)







பைங்குடில் அறைக்கு வெளியே எப்படி இருக்கு என்று பாருங்க :(







பார்க்க அழகா இருந்தாலும் குளிர் பட்டய கெளப்பும் :(
இன்னும் சில நாட்க்கள் தான் அப்புறம் வசந்த காலம் தான் :)

18 comments:

CVR said...

குளிர் மட்டுமா? உங்கள் படங்களும் பட்டையை கிளப்புது!!

அதுவும் ரெண்டாவது படம் செம க்ளாஸ்!!!

தோழி said...

excellent photography... blooming buds are really good... thanks for sharing. by the way in which country you live in...

நாதஸ் said...

நன்றி CVR மற்றும் தோழி :)

@ தோழி:
I am living in IL state in US...

காரூரன் said...

படங்கள் மிக அருமை, Manual Settings இல் எடுத்த்வையா? நல்ல ரசனை. வாழ்த்துக்கள்.

நானானி said...

கடைசி மூன்று படங்களும் எங்களுக்குக் காணக்கிடைக்காதவை!!
இயற்கையின் அழகை என்ன சொல்ல?
ரெஒம்ப நல்லாருக்கு.

நாதஸ் said...

நன்றி காரூரன் மற்றும் நானானி... :)

@ காரூரன் :
I used the Av(Aperature Priority) Exposure mode for these pictures...

சேதுக்கரசி said...

மிகவும் அழகு...
(கில்லி பரிந்துரையில் வந்தேன்)

நாதஸ் said...

நன்றி சேதுக்கரசி...

பிரேம்ஜி said...

எல்லா படங்களும் மிக சிறப்பாக உள்ளன.

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நல்லா இருக்கு படங்கள். பைங்குடில் அப்படின்னு சொல்லியாச்சே அப்புறம் என்ன பைங்குடில் அறைன்னு வேற சொல்லறீங்க!! பனியின் பொலிவு நல்லா இருந்தாலும் பனிப் பொழிவுன்னு சொல்ல வேண்டிய இடத்தில் பொழிவுன்னுதானே சொல்லி ஆகணும்!! :))

பிரேம்ஜி said...

வாழ்த்துக்கள் நாதாஸ். மார்ச் மாத புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

நாதஸ் said...

நன்றி பிரேம்ஜி மற்றும் இலவசக்கொத்தனார் :)

//பைங்குடில் அப்படின்னு சொல்லியாச்சே அப்புறம் என்ன பைங்குடில் அறைன்னு வேற சொல்லறீங்க!! பனியின் பொலிவு நல்லா இருந்தாலும் பனிப் பொழிவுன்னு சொல்ல வேண்டிய இடத்தில் பொழிவுன்னுதானே சொல்லி ஆகணும்!! :))
//
அண்ணாச்சி ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போ தான் தமிழ் எழுதுறேன்... எழுத்துப்பிழைகள் கொஞ்சம் இருக்கு :( சுட்டி காட்டியதற்கு நன்றி... கொஞ்சம் கொஞ்சமா திறுத்திக்குறேன் :)
"பைங்குடில்" என்ற வார்த்தை நீங்க சொல்லி தான் தெரியும் அதுக்கும் நன்றி !!!

மாதங்கி said...

எல்லா படங்களும் நல்லா இருக்கு; ஐந்தாவது படமும், கடைசிக்கு முந்திய படமும் சூப்பர்

கலக்குறீங்க

நாதஸ் said...

நன்றி மாதங்கி !!!

Amal said...

Nathas,
படங்கள் அனைத்தும் அருமை. அதிலும் 2,5 மற்றும் 13 மிக அருமையாக வந்துள்ளது.
மார்ச் மாத புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

நாதஸ் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி amal :)

M.Rishan Shareef said...

அன்பின் நாதாஸ்,

படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.
செம்பருத்தியின் மகரந்தம் மிக அழகிய கோணம்.
பிகோனியா இலைகளின் அழகு ஒவ்வொரு இலைக்கும் வேறுபடும்.நிறையப் படங்கள் எடுத்திருப்பீர்கள்.பார்க்க ஆவலாக உள்ளேன்.

கடைசி மூன்று படங்களும் இங்கு காணமுடியாதவை.
மிக அழகு.

மார்ச் மாதப் போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் :)

நாதஸ் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரிஷான் :)