Showing posts with label architechture. Show all posts
Showing posts with label architechture. Show all posts

Sunday, September 14, 2008

கட்டமைப்பு - PIT மெகா போட்டி 2008

வணக்கம் மக்கா,
கட்டமைப்புன்னு தலைப்ப பாத்தவுடனே, ஹையா சிகாகோ போய் எல்லா கட்டிடத்தையும் படம் பிடிச்சு போட்டுடலாம்னு நினைச்சேன். இந்த வாரம் போகலாம், அடுத்த வாரம் போகலாம்னு சோம்பேறி தனத்தால அங்க போகவே இல்லை. :(


போட்டி தேதி நெருங்கிட்டதால நாங்க வழக்கமா போகும் கோவிலை படம் பிடிச்சாச்சு. மேலும் இன்னொரு கோவில் கூட கண்டு பிடிச்சு படம் எடுத்துடோம்ல :). பக்கத்துல ஒரு சர்ச் ரொம்ப அழகா இருக்கும் அதை படம் பிடிக்கலாம்னு போனா, இங்க எல்லாம் படம் பிடிக்க கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க :(

1.) அரோரா பாலாஜி கோவில்
(இந்த கோவில்ல சாப்பாடு சூப்பரா இருக்கும் ;) )


2.)காவல் தெய்வம்


3.)சுவாமி நாராயணா கோவிலின் நுழைவாயில்
(மிகுந்த வேலைப்பாடு உள்ள கோவில்)


4.) சுவாமி நாராயணா கோவில்
(இந்த கோவில் முழுசும் பளிங்கால கட்டி இருக்காங்க)


5.) தட்டுங்கள் திறக்கப்படும்
(இந்த கோணம் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு)

இந்தியா வந்தவுடன் நம்ப ஊர் கோவில்கள் அனைத்தையும் வித விதமா படம் பிடிக்கணும் :)
கீழே இருக்கும் படங்கள் இரண்டும் பழைய படம் தான், ஆனா போட்டி தலைப்புக்கு ஏற்ற மாதிரி இருந்ததால் அதை போட்டு இருக்கேன் :)

6.) DeZwaan காற்றாலை -
(வட அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமையான காற்றாலை)


7.) பகிங்கம் நீர்ருற்று -
(இரவு நேரத்தில் இந்த நீர்ருற்று மிகவும் அழகா இருக்கும்)
வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை அடிச்சு தாக்குங்க மக்கா !!!