வணக்கம் மக்கா,
கட்டமைப்புன்னு தலைப்ப பாத்தவுடனே, ஹையா சிகாகோ போய் எல்லா கட்டிடத்தையும் படம் பிடிச்சு போட்டுடலாம்னு நினைச்சேன். இந்த வாரம் போகலாம், அடுத்த வாரம் போகலாம்னு சோம்பேறி தனத்தால அங்க போகவே இல்லை. :(
போட்டி தேதி நெருங்கிட்டதால நாங்க வழக்கமா போகும் கோவிலை படம் பிடிச்சாச்சு. மேலும் இன்னொரு கோவில் கூட கண்டு பிடிச்சு படம் எடுத்துடோம்ல :). பக்கத்துல ஒரு சர்ச் ரொம்ப அழகா இருக்கும் அதை படம் பிடிக்கலாம்னு போனா, இங்க எல்லாம் படம் பிடிக்க கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க :(
1.) அரோரா பாலாஜி கோவில்
(இந்த கோவில்ல சாப்பாடு சூப்பரா இருக்கும் ;) )
2.)காவல் தெய்வம்
3.)சுவாமி நாராயணா கோவிலின் நுழைவாயில்
(மிகுந்த வேலைப்பாடு உள்ள கோவில்)4.) சுவாமி நாராயணா கோவில்
5.) தட்டுங்கள் திறக்கப்படும்
இந்தியா வந்தவுடன் நம்ப ஊர் கோவில்கள் அனைத்தையும் வித விதமா படம் பிடிக்கணும் :)
கீழே இருக்கும் படங்கள் இரண்டும் பழைய படம் தான், ஆனா போட்டி தலைப்புக்கு ஏற்ற மாதிரி இருந்ததால் அதை போட்டு இருக்கேன் :)
6.) DeZwaan காற்றாலை -
6.) DeZwaan காற்றாலை -
வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை அடிச்சு தாக்குங்க மக்கா !!!
35 comments:
அனைத்து படங்களும் மிகவும் நன்றாக உள்ளன.முதல் படம் அசத்தல்.
படங்கள் அன்னைத்தும் மிகவும் அருமை.... வாழ்த்துக்கள்! முதல் படம் முதல் பரிசுக்குரியதாக இருக்கும்.. :)
மிகவும் நன்றி பிரேம்ஜி மற்றும் தமிழ் பிரியன் !!!
1 & 3 perfecto!
I liked 3 a lot.
HDR or exposure blending or?
படங்கள் அனைத்துமே வழமை போல அழகு நண்பா.
வெற்றிபெற வாழ்த்துக்கள் !
@ SurveySan -
The pics 1,3,4,5 & 6 are tonemapped. :)
@ எம்.ரிஷான் ஷெரீப் -
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா !!!
HDR-ல பின்னி பெடலெடுத்திருக்கீங்க..!!!
5-வது படம் அசத்தல்....!!!
மத்ததெல்லாமும் அருமையா இருந்தாலும் 5ஆவது படம்தான் ரொம்ப புடிச்சிருக்கு.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நாதாஸ்
கீப் ஸ்மைலிங் தளத்தில் இந்த பதிவுகள் அத்தனை படங்களும் "தெய்வீகச் சிரிப்பய்யா உங்கள் சிரிப்பு"என்று தெய்வ மணம் கமழ்ந்தது.வாழ்த்துக்கள்
Nice Captures. 1 & 6 என்னுடைய favorite. best of luck.
அத்தனை படங்களும் அருமை. அப்ரன்டீஸ் எடுக்கிற படங்களாங்க இது:)? தகுதியுள்ள பாராட்டுக்களை தாராள மனசு பண்ணி ஏத்துக்கோங்கோ:)!
கத்துக்குட்டியா இருக்கறது ரொம்பவே சௌகரியம். என்ன கமென்டினாலும் சிரிச்சுட்டு போயிடுவாங்க என்கிற தைரியத்திலே....
2 ஐ தவிர மத்ததுல ஆகாயம் ரொம்ப அழுத்தமான வர்ணமா போச்சு. அதே மாதிரி மேகங்களும். செயற்கையாவே இருக்கு.
6 ஐ பாக்க ரொம்ப அன்கம்பார்டபிலா இருக்கு. ஏன்? வித்தகர்கள் சொல்லுங்க.
என் வோட்டு 5 க்குதான்.
கலைநுணக்கமான கட்டடம். எடுத்து இருக்கிற விதமும் போஸ்ட் ப்ராஸஸ் பண்ணதும் நல்ல எபெக்ட். மேலேந்து அப்படியே க்ரே டோன் மாறி வெளிச்சமாறது...ஆஹா! பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு!
;-))
//(இந்த கோவில்ல சாப்பாடு சூப்பரா இருக்கும் ;) //
//இந்தியா வந்தவுடன் நம்ப ஊர் கோவில்கள் அனைத்தையும் வித விதமா படம் பிடிக்கணும் :)//
இந்த ரெண்டு வரிகளுக்கும் ஒன்னோட ஒன்னு நெருங்கிய சம்பந்தம் இருக்கிறாப் போல இருக்கே! :)
1 & 5 stand apart!
ஐந்தாம் படத்தில், அந்த அறிவிப்புப் பலகை, சங்கிலி இதெல்லாம் இல்லாமல் க்ராப் பண்ணி இருக்கலாமோ?
எல்லா படமும் அருமையாருக்குங்க. 3&5 என்னோட ஃபேவரிட்ஸ். வாழ்த்துகள்.
சூர்யா -
//
5-வது படம் அசத்தல்....!!!//
நன்றி சூர்யா !!!
@ Sathia -
// மத்ததெல்லாமும் அருமையா இருந்தாலும் 5ஆவது படம்தான் ரொம்ப புடிச்சிருக்கு.
வெற்றி பெற வாழ்த்துக்கள்//
எனக்கும் 5ஆவது படம் ரொம்ப பிடிச்சுருக்கு. ஆனா அந்த அறிவிப்புப் பலகை, சங்கிலி இதெல்லாம் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்ல இருந்து இருக்கும் :(
வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
goma -
// நாதாஸ்
கீப் ஸ்மைலிங் தளத்தில் இந்த பதிவுகள் அத்தனை படங்களும் "தெய்வீகச் சிரிப்பய்யா உங்கள் சிரிப்பு"என்று தெய்வ மணம் கமழ்ந்தது.வாழ்த்துக்கள்
//
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி கோமா !!!
ஒப்பாரி -
//Nice Captures. 1 & 6 என்னுடைய favorite. best of luck.//
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ஒப்பாரி !!!
ராமலக்ஷ்மி -
// அத்தனை படங்களும் அருமை. அப்ரன்டீஸ் எடுக்கிற படங்களாங்க இது:)? தகுதியுள்ள பாராட்டுக்களை தாராள மனசு பண்ணி ஏத்துக்கோங்கோ:)! //
வணக்கம்மா, பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி !!!
திவா -
//கத்துக்குட்டியா இருக்கறது ரொம்பவே சௌகரியம். என்ன கமென்டினாலும் சிரிச்சுட்டு போயிடுவாங்க என்கிற தைரியத்திலே.... //
தப்பை யார் வேணும்னாலும் தப்புன்னு சொல்லலாம், அது தான் சரி !!! :)
// 2 ஐ தவிர மத்ததுல ஆகாயம் ரொம்ப அழுத்தமான வர்ணமா போச்சு. அதே மாதிரி மேகங்களும். செயற்கையாவே இருக்கு.
//
இப்போ தாங்க HDR முயற்சி பண்றேன். கொஞ்சம் கொஞ்சமா திருத்திக்கனும் :D
//6 ஐ பாக்க ரொம்ப அன்கம்பார்டபிலா இருக்கு. ஏன்? வித்தகர்கள் சொல்லுங்க. //
அப்படியா ? என்னனு தெரியலயேப்பா...
// என் வோட்டு 5 க்குதான்.
கலைநுணக்கமான கட்டடம். எடுத்து இருக்கிற விதமும் போஸ்ட் ப்ராஸஸ் பண்ணதும் நல்ல எபெக்ட். மேலேந்து அப்படியே க்ரே டோன் மாறி வெளிச்சமாறது...ஆஹா! பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு!
;-)) //
நன்றி ! எனக்கும் 5ஆவது படம் ரொம்ப பிடிச்சுருக்கு.
kannabiran, RAVI SHANKAR (KRS) -
// இந்த ரெண்டு வரிகளுக்கும் ஒன்னோட ஒன்னு நெருங்கிய சம்பந்தம் இருக்கிறாப் போல இருக்கே! :) //
இப்படி பப்ளிக்கா வா உண்மைய சொல்றது. :(
//1 & 5 stand apart!//
நன்றி அண்ணாத்தே !!!
//ஐந்தாம் படத்தில், அந்த அறிவிப்புப் பலகை, சங்கிலி இதெல்லாம் இல்லாமல் க்ராப் பண்ணி இருக்கலாமோ?//
க்ராப் பண்ணி பாத்தேன் ஆனா நல்லா வரலை :( . "Clone Tool" use பண்ணி பாக்கணும் :)
கைப்புள்ள -
//எல்லா படமும் அருமையாருக்குங்க. 3&5 என்னோட ஃபேவரிட்ஸ். வாழ்த்துகள். //
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றி தல !!!
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு, வெற்றி பெற வாழ்த்துக்கள். 1, 3 சூப்பர். HDR செய்தீர்களா? பகல் பொழுது நிறம் மாதரியாக தெரியவில்லை.:) 5 இல் உள்ள glow effect நன்றாக இருக்கிறது.
வாசி
@ வாசி -
//படங்கள் எல்லாம் நல்லா இருக்கு, வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு நன்றி வாசி !!!
//HDR செய்தீர்களா? பகல் பொழுது நிறம் மாதரியாக தெரியவில்லை.:) //
1,3,4,5 & 6 படங்கள் HDR செய்யப்பட்டது
//5 இல் உள்ள glow effect நன்றாக இருக்கிறது.//
நன்றி !!!
ஆஹா ஃப்ளிக்கர்லதான் பாத்துகிட்டே இருக்கோமே புதுசா என்ன இருக்க போவுதுன்னு இந்தபக்கம் வரல. வந்தாதானே தெரியுது.
இந்த போடு போடறீங்களே.
முதல்படத்தை விடுங்க லிஸ்ட்ல வரப்போறது.
அந்த மூணாவது படம் க்ளாஸ்.
ஆறாவது படம் ஃப்ளிக்கர்ல பாத்ததுதான்னு ஞாபகம். ஆனா இங்க ஃபுல்சைஸ்ல பாக்கும்போது ஜிலீர்ங்குது.
இந்தியா வரப்ப சொல்லுங்க நாதாஸ். ஒரு ட்ரிப் போட்டு என்ன டெக்னிக்லாம் பண்றீங்கன்னு கண்டுபுடிச்சுக்கறேன்.
//ஆஹா ஃப்ளிக்கர்லதான் பாத்துகிட்டே இருக்கோமே புதுசா என்ன இருக்க போவுதுன்னு இந்தபக்கம் வரல. வந்தாதானே தெரியுது.
இந்த போடு போடறீங்களே.//
வருகைக்கு நன்றி நந்து !!!
//அந்த மூணாவது படம் க்ளாஸ்.
ஆறாவது படம் ஃப்ளிக்கர்ல பாத்ததுதான்னு ஞாபகம். ஆனா இங்க ஃபுல்சைஸ்ல பாக்கும்போது ஜிலீர்ங்குது.
//
ரெம்ப டாங்க்ஸ் :)
//இந்தியா வரப்ப சொல்லுங்க நாதாஸ். ஒரு ட்ரிப் போட்டு என்ன டெக்னிக்லாம் பண்றீங்கன்னு கண்டுபுடிச்சுக்கறேன்.//
நானே உங்க ஊருக்கு வந்து உங்கக்கிட்ட பறவைகளை எப்படி படம் பிடிக்கறதுன்னு கத்துக்கலாம்னு இருக்கேன் தல !
//நானே உங்க ஊருக்கு வந்து உங்கக்கிட்ட பறவைகளை எப்படி படம் பிடிக்கறதுன்னு கத்துக்கலாம்னு இருக்கேன் //
1000 mm லென்ஸ் லெவல்ல ஒண்ணு புடிச்சுகிட்டு வாங்க. எல்லா பொழப்பையும் தூக்கி போட்டுட்டு காடு மலைல்லாம் அலைய நான் ரெடி. 300mm ல கிட்டதட்ட கையில் பிடிக்கும் டிஸ்டன்ஸ் வரைக்கும் போக வேண்டி இருக்கு :(
PIT ல் வோட்டுப்போட்ட படங்களில் உங்களுடையதும் ஒன்று. ஆனால் இப்பதா உங்க பிளாக்கிற்கு வந்து பார்க்கிறேன்.
5ம் படத்தை போட்டிக்கு அனுப்பியிருக்கலாமென்பது எனது எண்ணம்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்
@ சுபாஷ் -
//PIT ல் வோட்டுப்போட்ட படங்களில் உங்களுடையதும் ஒன்று. ஆனால் இப்பதா உங்க பிளாக்கிற்கு வந்து பார்க்கிறேன்.//
உங்க ஓட்டுக்கு மிக்க நன்றி !!! :)
//5ம் படத்தை போட்டிக்கு அனுப்பியிருக்கலாமென்பது எனது எண்ணம்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்//
எனக்கும் 5ஆவது படம் ரொம்ப பிடிச்சுருக்கு. ஆனா அந்த அறிவிப்புப் பலகை, சங்கிலி இதெல்லாம் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்ல இருந்து இருக்கும் :(
வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
@ நந்து -
//1000 mm லென்ஸ் லெவல்ல ஒண்ணு புடிச்சுகிட்டு வாங்க. //
அண்ணாச்சி சீனா போயிட்டு வரும் போது ஒரு 400mm அல்லது 500mm எனக்கு வாங்கிட்டு வாங்க. :)
மெகாவில் பரிசு. மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பல பரிசுகள் வென்றிட.
மெகாவில் பரிசு. மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பல பரிசுகள் வென்றிட.
@ ராமலக்ஷ்மி -
//மெகாவில் பரிசு. மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பல பரிசுகள் வென்றிட.//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்கம்மா !!!
Post a Comment